தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சிம்ரன், தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், சரத்குமார், விஜய், அஜித், சூர்யா, பிரசாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வரும் அவர், சமீபத்தில் வெளியான “டூரிஸ்ட் பேமிலி” படத்தின் வெற்றியால் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

தொடர்ந்து பல படங்களில் யதார்த்தமான நடிப்பால் தனித்துவத்தை நிலைநிறுத்தி வரும் சிம்ரன், தற்போது தயாரிப்பாளராக புதிய முயற்சியை தொடங்க இருக்கிறார். ‘போர் டி மோசன் பிக்சர்ஸ்’ என்ற நிறுவனத்தின் சார்பில், திரில்லர் மற்றும் ஆக்சன் கதைக்களத்தில் உருவாகும் புதிய படத்தை தயாரிப்பதோடு, அதில் முக்கிய வேடத்திலும் நடிக்க உள்ளார்.
இப்படத்தை அறிமுக இயக்குனர் ஷியாம் இயக்கவுள்ளார். தேவயானி, நாசர் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முன்பதிவுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.