உடல் எடை அதிகரித்ததால் ஸ்லிம்மாக இருக்க ஓசெம்பிக் போன்ற ஊசிகளை நடிகை தமன்னா பயன்படுத்தியதாக இணையத்தில் செய்திகள் பரவி வந்தன. இதற்கு சமீபத்திய பேட்டியில் தமன்னா விளக்கம் அளித்தார். “நான் ஸ்லிமாக இருக்க ஊசிகளைப் பயன்படுத்துகிறேன் என்ற செய்தியில் எந்த உண்மையும் இல்லை என்றுள்ளார்.

மேலும், என் கேரியரின் தொடக்கத்தில் நான் எப்படி இருந்தேனோ, அப்படியேதான் இருக்கிறேன். எனக்கு நான் புதிதாகத் தெரியவில்லை. பொதுவாக பெண்களின் உடல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறும். அதேபோல்தான் நானும்.
எப்போதும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது, என்று கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.தமன்னா தற்போது கதாநாயகியாக அல்லாமல் சிறப்பு பாடல்களில் நடனமாட அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

