நடிகர் நானி நடித்திருக்கும் ‘ஹிட் 3’ திரைப்படம் வருகிற மே 1ஆம் தேதி தெலுங்கில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நானி, தமிழ் சினிமாவை பற்றியும் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்தார். அந்த தொடரில், ஒரு நேர்காணலில் கார்த்தியின் ‘மெய்யழகன்’ படத்தை சிறப்பாகப் புகழ்ந்து பேசியுள்ளார்.
நானி கூறியதாவது, தமிழ் சினிமாவில் மட்டும் அல்ல, கடந்த பத்தாண்டுகளில் நான் பார்த்த சிறந்த படம் ‘மெய்யழகன்’ தான். அது ஒரு அதிசயமான படைப்பு. நீங்கள் எவ்வளவு செட் அமைத்து ஆயிரக் கோடி செலவழித்தாலும், ‘மெய்யழகன்’ போன்ற மேஜிக் திரைப்படம் உருவாகாது. இத்தனை தனிப்பட்ட உணர்வோடும் நேர்த்தியோடும் படம் எடுக்கப்படுவது மிகவும் அபூர்வமானது. அந்த படத்தை பார்த்த பிறகு கார்த்தியிடம், படம் எனக்கு மிகுந்த மனநிறைவை தந்ததாக தெரிவித்தேன். அந்த படத்தை நினைத்தாலே எனக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது என்று நானி தெரிவித்துள்ளார்.