இந்தியா முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட பான் இந்தியா ஹீரோ தெலுங்கு நடிகர் பிரபாஸ். சமீபத்தில் பிரபாஸ் ஹீரோவாக அறிமுகமாகி 23 ஆண்டுகள் நிறைவடைந்தன. ஹீரோவாக அவரது முதல் படம் 2002ல் வெளியான ஈஷ்வர். ரூ. 1 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ. 3.6 கோடி மேல் வசூலை ஈட்டி அசத்தியது. பிரபாஸ் தனது முதல் படமான ஈஷ்வர் படத்திற்கு சுமார் ரூ.4 லட்சம் சம்பளம் வாங்கினாராம். தற்போது அவர் ஒரு படத்திற்கு ரூ. 150 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


