தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில், சேகர் கம்முலா இயக்கத்தில் கடந்த ஜூன் 20ம் தேதி வெளியான ‘குபேரா’ திரைப்படம், அதன் வெளியீட்டு நாளிலேயே உலகளவில் ரூ. 30 கோடி வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பாக்ஸ் ஆபீஸ் தகவல்களின் படி, இந்த வசூலில் தெலுங்கில் சுமார் ரூ. 12 கோடி, தமிழில் ரூ. 5 கோடி, பிற மாநிலங்களில் ரூ. 3 கோடி மற்றும் வெளிநாடுகளில் ரூ. 10 கோடியை வசூலித்திருக்குப் என கூறப்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவில் மட்டும் ரூ. 1.3 மில்லியன் வரை வசூலித்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டுள்ளது. தமிழுடன் ஒப்பிடும் போது தெலுங்கில் இரண்டு மடங்கு அதிகமாக வசூல் செய்திருப்பது திரையுலகத்தினரை ஆச்சரியப்படச் செய்துள்ளது.
படம் வெளியான பிறகு பெற்ற நல்ல விமர்சனங்களால், தற்போது தமிழிலும் முன்பதிவுகள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் நேற்று மற்றும் இன்றைய தினங்கள் விடுமுறையாக இருப்பதாலும், படத்தின் இரண்டாம் நாள் வசூல் முதல்நாளைவிட அதிகமாக இருக்கும் வாய்ப்பு இருப்பதாகக் கணிக்கப்படுகிறது. இதற்காக, வெகு சீக்கிரமே ரூ. 100 கோடி வசூலித்ததாக அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.