Touring Talkies
100% Cinema

Sunday, September 28, 2025

Touring Talkies

இது ஏ.ஐ அல்ல…தன்மீதான விமர்சனங்களுக்கு வீடியோ மூலம் பதிலளித்த நடிகை சாய் பல்லவி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை சாய் பல்லவி நீச்சல் உடையில் இருப்பது போல காணப்பட்ட சில புகைப்படங்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டு வைரலானது. ஆனால் பின்னர் அவை ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டவை என்பது வெளிச்சத்துக்கு வந்தது.

இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். ஆனால் சாய் பல்லவி இதுகுறித்து எந்தவிதமான பதிலும் அளிக்கவில்லை. இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு, அந்தச் சர்ச்சைக்கு மறைமுகமாக பதிலளித்துள்ளார். ”இவை உண்மையானவை, ஏ.ஐ. புகைப்படங்கள் அல்ல” என்ற தலைப்பில் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

சமீப காலமாக பல நடிகைகளின் புகைப்படங்களும் வீடியோக்களும் போலியாக உருவாக்கப்பட்டு இணையத்தில் பரவி வருகின்றன. இது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

Read more

Local News