Touring Talkies
100% Cinema

Tuesday, June 17, 2025

Touring Talkies

கிரிக்கெட் வீரர் கங்குலியை சந்தித்து அவரோடு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நெகிழ்ச்சியோடு பகிர்ந்த நடிகை நவ்யா நாயர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழில் ‘அழகிய தீயே, ராமன் தேடிய சீதை, மாயக்கண்ணாடி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நவ்யா நாயர். அதன் பின்னர் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலான இவர் நடன பயிற்சி பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் லண்டனுக்கு சுற்றுலா சென்றிருந்த நவ்யா நாயர் அங்கே, தான் ஆராதிக்கும் கிரிக்கெட் ஜாம்பவானாக கங்குலியை நேரில் சந்திக்கும் வாய்ப்பை பெற்றார்.
அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள நவ்யா நாயர், “என்னுடைய லண்டன் சுற்றுப்பயணத்தில் ஒன் அண்ட் ஒன்லி சவுரவ் கங்குலியை சந்தித்தது இன்னும் ஒரு கனவு போலவே இருக்கிறது. ஒரு பள்ளி மாணவியாக தொலைக்காட்சியில் பெங்கால் தாதா விளையாடியதைப் பார்த்து கொண்டாடிய எனக்கு இன்று அவரை நேரில் சந்திக்கும் இந்த தருணம் என்றென்றும் நினைவில் இருந்து அகலாது” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News