நடிகர் கார்த்தியுடன் ‘சர்தார் 2’ திரைப்படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பின் போது எடுத்துக்கொள்ளப்பட்ட புகைப்படங்களை நடிகை மாளவிகா மோகனன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றன.
2022ஆம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படத்தில் கார்த்தி தந்தை மற்றும் மகன் என இரட்டை வேடங்களில் நடித்ததற்காக ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றார். அந்தப் படம் வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக ‘சர்தார் 2’ உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்த தொடர்ச்சித் திரைப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து எஸ். ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், பிரியங்கா மோகன் உள்ளிட்ட முக்கிய நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், ‘சர்தார் 2’ திரைப்படம் ஜூலை மாதத்தில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.