நடிப்பு, கார் ரேஸ் என பிசியாக வலம் வருகிறார் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் குமார். குட் பேட் அக்லி படத்தை தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் நடிகர் சூரி சமீபத்தில் நடிகர் அஜித்குமாரை நேரில் சந்தித்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அவரது சமூக வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், அவரை பார்த்த நொடியிலேயே புரிந்தது. உண்மையான வெற்றி உருவாக்கப்படுவதல்ல. அது தினமும் உழைப்பாலும், மனவலிமையாலும் சம்பாதிக்கப்படுவது. அவருடன் நடந்த அந்த உரையாடல் அமைதியாக இருந்தாலும் ஆழமான அர்த்தம் கொண்டது” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக சிறுத்தை சிவா இயக்கிய வேதாளம் படத்தில் அஜித் உடன் காமெடி கதாபாத்திரத்தில் சூரி நடந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

