Touring Talkies
100% Cinema

Thursday, December 11, 2025

Touring Talkies

நாட்டில் இரக்கம் என்பது குறைந்து கொண்டே வருகிறது – நடிகை அபிராமி வெங்கடாசலம் Open Talk!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழில் ‘பாட்ஷா’, ‘அண்ணாமலை’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா, ‘அனந்தா’ என்ற ஆன்மிகப் படத்தை இயக்கியுள்ளார். கிரீஷ் கிருஷ்ணமூர்த்தி தயாரித்துள்ள இப்படத்தில் ஜெகபதி பாபு, சுஹாசினி மணிரத்னம், ஒய்.ஜி. மகேந்திரன், நிழல்கள் ரவி, தலைவாசல் விஜய், ஸ்ரீ ரஞ்சனி, ‘பிக்பாஸ்’ அபிராமி வெங்கடாசலம் உள்பட பலர் நடித்துள்ளனர்.

சென்னையில் நடந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அபிராமி பேசும்போது, “எனக்கு வாய்ப்பு தந்த படக்குழுவுக்கு நன்றி. எனக்கு ஆன்மிகத்தில் அதீத நம்பிக்கை உண்டு. இந்த படத்தில் எனக்கு கிடைத்த வாய்ப்பும் கடவுள் தந்தது என்றே நினைக்கிறேன்.

நான் நடனம் ஆடி கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. இந்த படத்தில் நடனமாட வேண்டும் என்று சொன்னபோது மிரண்டேன். ஆனால் என்னுள் இருந்த பக்தி என்னை மாற்றியது, என்னை நடனமாடவும் செய்தது. ஆன்மிகம் போல ‘அனந்தா’ என்பதும் முடிவில்லாத பயணம். நாட்டில் இரக்கம் என்பதே குறைந்து போய்வருகிறது. அது மாறவேண்டும். ஒரு நதி போல இந்த நாட்டில் இரக்கம் ஓடவேண்டும்” என்று கூறினார்.

- Advertisement -

Read more

Local News