லேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் உரிமையாளரான ஐசரி கணேஷ் தற்போது 10 திரைப்படங்களைத் தயாரித்து வருகிறார். இதில், நடிகர்கள் தனுஷ், விஷணு விஷால், ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்நிலையில் ஐசரி கணேஷ் அவர்கள் வேல்ஸ் மியூசிக் என்ற இசை நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இதன் அறிமுக நிகழ்வில் நடிகர்கள் தனுஷ், விஷ்ணு விஷால், விஜய் ஆண்டனி, பிரபு தேவா, இயக்குநர்கள் வெற்றி மாறன், மாரி செல்வராஜ், பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார், தயாரிப்பாளர் லலித் மற்றும் இசையமைப்பாளர்கள் ஏ. ஆர். ரஹ்மான், அனிருத், இமான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
