1980களில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்த ஹீரோ, ஹீரோயின்கள் வருடத்திற்கு ஒருமுறை கூடுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு நடைபெற்ற ‘80ஸ் ரீயூனியன்’ சந்திப்பு சென்னை நகரில் மிக விமர்சையாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிரஞ்சீவி, வெங்கடேஷ், பிரபு, சரத்குமார், ரகுமான், பாக்யராஜ் ஆகியோர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும், குஷ்பூ, சுஹாசினி, நதியா, ராதா, ரேவதி, ரம்யா கிருஷ்ணன், லிசி உள்ளிட்ட பல பிரபல நடிகைகளும் கலந்து கொண்டனர்.
பழைய நாட்களை நினைவுகூரும் வகையில் நடந்த இந்த சந்திப்பில், அனைவரும் ஆடல், பாடல், விருந்து ஆகியவற்றுடன் தங்களது பழைய படப்பிடிப்பு அனுபவங்களையும், இனிய நினைவுகளையும் பகிர்ந்து கொண்டனர்.