தமிழின் சினிமாவின் முன்னணி நடிகரான பிரதீப் ரங்கநாதன், தமிழ் சினிமாவில் தொடர்ந்து இரண்டு 100 கோடி வசூல் படங்களை வழங்கியுள்ளவர். தற்போது அவர் நடித்திருக்கும் ‛டியூட்’ மற்றும் ‛லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ ஆகிய இரண்டு படங்களும் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஒரே நடிகர் நடித்த இரண்டு படங்கள் ஒரே நாளில் அல்லது அடுத்தடுத்த சில நாட்களில் வெளியானது தமிழ் சினிமாவில் அபூர்வம்.
ஆனால் இப்படி வெளியானால் வசூல் பாதிக்கும் என்பதால் இரு படங்களிலும் எது தீபாவளி ரிலீசாகும் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், பிரதீப் ரங்கநாதன் தன்னுடைய பதிவில் ‛டியூட் தீபாவளி, மாதம் ஆரம்பம்’ என்று அறிவித்துள்ளார். இதனால், தீபாவளிக்கு ‛டியூட்’ வெளியாக, ‛லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ தள்ளிப்போகும் என்பது உறுதியாகியுள்ளது.