பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சோனாக்சி சின்ஹா, 2010-ஆம் ஆண்டு வெளியான தபாங் படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். பின்னர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான லிங்கா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
தற்போது சோனாக்சி சின்ஹா தெலுங்கிலும் அறிமுகமாக உள்ளார். வெங்கட் கல்யாண் இயக்கும் ஜடதாரா படத்தில் சுதீர் பாபு கதாநாயகனாக நடிக்கும் நிலையில், பாலிவுட் நடிகை சோனாக்சி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது அவரது முதல் தெலுங்கு படம் என்பதால் அதிக எதிர்பார்ப்புடன் உள்ளது.
ஏற்கனவே இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி வைரலான நிலையில், தற்போது தனா பிசாச்சி என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இப்படம் தெலுங்கு மற்றும் இந்தியில் நவம்பர் 7-ஆம் தேதி வெளியாகவுள்ளது. விரைவில் டிரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.