Touring Talkies
100% Cinema

Thursday, October 2, 2025

Touring Talkies

பெண்களின் வாழ்க்கை குறித்து கவிதை எழுதிய நடிகை சமந்தா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் இருபதுகளில் இருந்து முப்பது என்பது எந்தவகையில் மாறுபட்டதாக உள்ளது என்பதை கவிதையாக சமந்தா எழுதியுள்ளார்.இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத் தனது விடியோவைப் பதிவிட்டு அவர் குறிப்பிட்டுள்ளதாவது, 

மலையிறக்கத்தை 30களுக்குப் பிறகுதான் இந்த உலகம் சொல்லித்தருகிறது.

உங்கள் பளபளப்பு மங்கும்,

உங்கள் அழகு சரிந்து நழுவும்

காலம் ஓடுவதைப் போலவே

அழகான முகம், கச்சிதமான உடல், பகட்டு வாழ்க்கை

இவை எல்லாவற்றுக்காகவும்

இருபதுகளில் விரைய வேண்டும்

எனது இருபதுகள் மிகவும் பரபரப்பானது, ஓய்வறியாதது

அவசரகதியுடனேயே அவற்றை அணுகினேன்

போதுமான அளவு அழகாக இருப்பதற்கும் அவசரம்

போதுமான அளவு உணர்வதற்கு அவசரம்

நான் நானாக இருப்பதற்கும் அவசரம்

ஆனால், இந்த அவசரகதியில்

எனக்குள் நான் இழந்தவற்றை யாரும் பார்க்கவில்லை…

நான் பூரணமாக இருக்கிறேன் என்று யாரும் சொல்லவில்லை

ஒருவர் கூட சொல்லவில்லை.

என்னை வேறு நபருக்காக மாற்றிக்கொள்ளாமல்

என்னை நான் அறிந்தது போலவே அதைக் கண்டறிவேன்.

முப்பதுகளுக்கு வந்தால்….

ஏதோவொன்று மிருதுவாகியுள்ளது

ஏதோவொன்று திறந்தவெளியாகியிருக்கிறது.

என் தவறுகளின் கனத்தை

என்னைச் சுற்றியே இழுத்து வந்ததை நிறுத்திவிட்டேன்.

அதற்குள் நான் பொருந்தியிருப்பதை நிறுத்திவிட்டேன்.

உலகத்திற்கு காட்டும் வாழ்க்கை

எனக்குள் நான் வாழும் வாழ்க்கை என இரு வாழ்க்கை வாழ்வதை நிறுத்திவிட்டேன்… இப்போதெல்லாம்,

பொது இடங்களில் இருக்கும் நான்.

யாரும் கவனிக்காதபோது இருக்கும் நானாகவே இருக்கிறேன்.

என் உணர்வுகளில்

மிகவும் உயிர்ப்புடன் இருந்தது அப்போதுதான்…

அனைத்து பெண்களுக்கும் பொருந்தக்கூடியது இது.

அவளுடைய முழுமையை விரும்புகிறேன்.

அவளிடமிருக்கும் ஒருவித அமைதியை விரும்புகிறேன்.

அவள் ஓடுவதை நிறுத்தும்போதுதான்

அவளுக்குள் எல்லாம் இருப்பதை அவள் உணர்கிறாள்.

ஏனெனில்,

எந்தவித வருத்தமும்,

எந்தவித வேஷமும் இன்றி

நீங்கள் நீங்களாக இருக்கும்போது,

நீங்கள் மட்டும் விடுதலை பெறவில்லை

இந்த உலகமும் விடுதலையாகிறது

என ஆங்கிலத்தில் சமந்தா பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News