தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் தற்போது இயக்குனராகவும் வலம் வருபவர் தனுஷ். அவர் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் இட்லி கடை. இது தனுஷ் நடிக்கும் 52வது திரைப்படமாகும். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கதைக்களம் எப்படி இருக்கும் என்பதில் ரசிகர்களிடையே ஆர்வம் நிலவி வருகிறது.
‘யு’ சான்றிதழ் பெற்றுள்ள இந்த திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கிடையில், இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படத்தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.