கன்னட நடிகை ஆஷிகா ரங்கநாத் தற்போது கதவைபவா என்ற புதிய படத்தில் நடிக்கிறார். துஷ்யந்த் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தை சுனி இயக்கியுள்ளார். நவம்பர் 14 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டனர்.
இந்த படத்தை சர்வகாரா சில்வர் ஸ்க்ரீன்ஸ் மற்றும் சுனி சினிமாஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. தயாரிப்பாளர்களாக தீபக் திம்மப்பா மற்றும் சுனி இணைந்துள்ளனர். இப்படத்திற்கு இசையை ஜூடா சாந்தி அமைக்க, ஒளிப்பதிவை வில்லியம் டேவிட் கவனித்துள்ளார்.
2022ஆம் ஆண்டு அதர்வா நடித்த பட்டத்து அரசன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ஆஷிகா ரங்கநாத், தற்போது கார்த்தியுடன் சர்தார் 2, தெலுங்கில் சிரஞ்சீவியுடன் விஷ்வம்பரா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.