ஜே. கமலக்கண்ணனின் ஜே.கே. ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் முதல் படத்தை யாத்திசை படத்தின் மூலம் விமர்சன ரீதியாகவும் வணிகரீதியாகவும் வெற்றியடைந்த இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்குகிறார்.

இதில் நடிகர் சசிகுமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தை மையமாகக் கொண்ட இப்படத்தில், அவர் ஐஎன்ஏ அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்தின் சிறப்பம்சமாக ஆக்ஷன் காட்சிகள் அமைய இருப்பதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.
சுமார் 70% படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக கூறப்படும் நிலையில், ஜே.கே. ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. சேயோன், பவானி ஸ்ரீ, சமுத்திரக்கனி, ஷிவதா, கிஷோர் உள்ளிட்ட பலரும் இதில் நடித்துள்ளனர். இப்படம் குறித்த மேலும் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

