நடிகர் கார்த்தியின் 27வது திரைப்படம் ‘மெய்யழகன்’. இந்த படத்தை ’96’ படத்தின் இயக்குனர் பிரேம் குமார் இயக்கியிருந்தார். இதில் கார்த்தியுடன் முதல் முறையாக இணைந்து அரவிந்த் சாமி நடித்தார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண், தேவதர்ஷினி, ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலரும் நடித்தனர்.

சூர்யா – ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார். கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி ஆகியோருக்கிடையேயான பாசத்தை மகத்துவத்தை மையமாகக் கொண்ட இந்த படம் மக்கள் மத்தியில் எதிர்பாராத அளவில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது ரசிகர்கள் இந்த படத்தின் இரண்டாம் பாகத்துக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இதற்கிடையில், ‘மெய்யழகன்’ திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதனை முன்னிட்டு தயாரிப்பு நிறுவனம் சிறப்பு வீடியோவொன்றையும் வெளியிட்டுள்ளது.