தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தால் வழங்கப்படும் கலைமாமணி விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த விருது பல ஆண்டுகளாக இயல், இசை, நாடகக் கலைக்கு சேவை செய்த கலைஞர்களின் பங்களிப்பை பாராட்டி வழங்கப்படுகிறது. அந்த வகையில், கடந்த 2021, 2022, 2023 என மூன்று ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது, அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் திரைத்துறையை பொறுத்தவரையில், நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, விக்ரம் பிரபு, மணிகண்டன், நடிகை சாய் பல்லவி, இயக்குநர் லிங்குசாமி, சண்டை பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன், பாடகி ஸ்வேதா மோகன், பாடலாசிரியர் விவேகா, அனிருத் உள்ளிட்டோருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றினை நடிகர் மணிகண்டன் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- “சிறப்புமிக்க கலைமாமணி விருது எனக்கு வழங்கிய தமிழ்நாடு அரசாங்கத்திற்கு மற்றும் இயல் இசை நாடக மன்றத்துக்கு என் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என் வாழ்வில் இது ஒரு முக்கியமான நிகழ்வாகும். என்னை தொடர்ந்து ஆதரித்து வந்த தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் முக்கியமாக தமிழக மக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். இந்த கவுரவம் உங்களுக்கெல்லாம் சொந்தமானது.