கார்த்தியுடன் விருமன், சிவகார்த்திகேயனுடன் மாவீரன் போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் கதாநாயகியாக உருவெடுத்தவர் அதிதி ஷங்கர். பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி, எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்தவர். சினிமா மீது கொண்ட ஆசையால், அவர் கலை துறையில் களமிறங்கி இருக்கிறார். பாடகி, நடன கலைஞர் மற்றும் நடிகை என பன்முக திறன்களைக் கொண்ட அதிதி ஷங்கர், தமிழ் தாண்டி தெலுங்கு சினிமாவில் கூட கால் பதித்துள்ளார்.

அதிதி ஷங்கர் தனது சினிமா அனுபவம் குறித்து கூறியது, “சிறுவயதில் இருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. அப்பாவை பார்த்து எனக்குள் சினிமா ஆசை துளிர்விட்டது. என் பெற்றோரிடம் என் சினிமா ஆசையை சொன்னபோது, அவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். ‘முதலில் படி’ என்று கூறினர். எனவே நான் மருத்துவம் படித்தேன். எம்.பி.பி.எஸ் முடித்த கையுடன் அப்பாவிடம் சென்றேன். சினிமாவில் என்னால் சாதிக்க முடியவில்லை என்றால் மீண்டும் மருத்துவம் செய்ய வருவேன்’ என்று சொன்னேன். அப்பா ‘சரி’ என்றார். அதன் பின் சினிமாவில் நுழைந்து, அடையாளம் பெற்றேன். பொத்தாம்பொதுவாக வாரிசு நடிகை என்று விமர்சிப்பவர்கள் உண்டு. ஆனால் நான் அதைப் பற்றி தவறாக நினைக்கவில்லை. விமர்சனங்கள் என்னை ஒருபோதும் பாதிக்காது. நான் என் திறமையை அதிகம் நம்புகிறேன்.”
“எனக்கு ஒரு வரலாற்று படத்தில் நடிக்க வேண்டும் என்பது ஆசை. விரைவில் அது நடக்கவேண்டும் என்று காத்துக்கொண்டும், வேண்டிக்கொண்டும் இருக்கிறேன். ஒரு நடிகையாக எனக்கும், அப்பா இயக்கத்தில் நடிக்க ஆசை. கார்த்தி, சிவகார்த்திகேயனுடன் மீண்டும் ஜோடி சேர ஆசை. அதேபோல் ராம்சரண், அல்லு அர்ஜுன் போன்றோருடன் தெலுங்கில் ஜோடி சேர்ந்து நடிக்க என்று கூறியுள்ளார்.