யாஷ் ஹீரோவாக நடிக்கும் டாக்ஸிக்’ படத்தை கீது மோகன்தாஸ் இயக்குகிறார். இதில் கியாரா அத்வானி, நயன்தாரா, ஹூமா குரேஷி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நேரடியாக உருவாகும் இந்தப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் டப்பிங் செய்து வெளியாக உள்ளது. ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்து உருவாக்கப்படும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குநர் ஜே.ஜே. பெர்ரி பணியாற்றியுள்ளார்.
மும்பையில் 45 நாட்கள் நடைபெற்ற ஆக்ஷன் காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இந்தக் காட்சிகள் இந்திய சினிமாவுக்கு புதுமையை வழங்கும் என கூறப்படுகிறது. இறுதி கட்ட படப்பிடிப்பு இம்மாத இறுதியில் பெங்களூருவில் நடைபெறவுள்ளது. அதனுடன் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.