தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வரும் தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் இட்லி கடை. தனுஷ் இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார் ஜி.வி.பிரகாஷ். டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில், ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கதைக்களம் எப்படியிருக்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கும் இப்படத்தில் அருண் விஜய் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். வருகிற அக்டோபர் 1ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 14ஆம் தேதி சென்னை நேரு மைதானத்தில் நடைபெற்றது. தற்போது படம் வெளியீட்டு தேதி நெருங்கி வரும் நிலையில், டிரெய்லரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன் படி, வரும் 20ஆம் தேதி கோவை ப்ரோஷன் மாலில் இட்லி கடை படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.