அயோத்தி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ப்ரீத்தி அஸ்ரானி, தற்போது கவினின் கிஸ் படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. மேலும் எஸ்.ஜே. சூர்யாவின் கில்லர் படத்திலும் நடித்து வருகிறார். மேலும், மலையாளத்தில் பல்டி படத்திலும் நடிக்கிறார்.

கில்லர் பற்றி அவர் கூறுகையில், “இந்த படத்தில் நான் மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இதுபோல் இதுவரை நடித்ததே இல்லை. இப்படத்துக்காக 80 பேர் ஆடிஷன் எடுத்தார்கள்.
அதில் என்னைத் தேர்ந்தெடுத்தது எனக்கு பெரும் பாக்கியம். முதலில் எஸ்.ஜே. சூர்யா சாருடன் நடிக்கிறது கொஞ்சம் பதட்டமாக இருந்தது ஆனால் தற்போது அப்படி இல்லை என்றுள்ளார்.