வீர தீர சூரன் படத்திற்கு பின் விக்ரமின் அடுத்த படங்கள் குறித்து கேள்வி நீடித்து வருகிறது. முதலில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் விக்ரமின் 63வது படம் உருவாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் அது நடக்கவில்லை. அதன் பின் பிரேம் குமார் இயக்கும் 64வது படம் அறிவிக்கப்பட்டது. இப்போது அதுவும் தள்ளிப்போகும் நிலை உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது கிடைத்த தகவலின்படி, விக்ரமின் 63வது படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க, ‘ராட்சசன்’ புகழ் ராம்குமார் இயக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.விக்ரமின் 64வது படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க, விஷ்ணு எடவன் இயக்குவதாகவும் கூறப்படுகிறது.
இதைத் தவிர, விக்ரமின் 65வது படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அதை ஒரு புதுமுக இயக்குநர் இயக்கவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.