Touring Talkies
100% Cinema

Wednesday, June 18, 2025

Touring Talkies

குட் நைட் பட இயக்குனருடன் கைக்கோர்கிறாரா நடிகர் சிவகார்த்திகேயன்? வெளியான நியூ அப்டேட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் தனது 25வது படமாக தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் அவருடன் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். அதேபோல், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி என்ற திரைப்படத்திலும் அவர் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில், சிவகார்த்திகேயனின் 24வது திரைப்படத்தை குட் நைட் திரைப்பட இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கவுள்ளார் என்றும், இப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படம், அப்பா–மகன் உறவை மையமாகக் கொண்டு உருவாகிறது.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனின் தந்தையாக மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லாலைக் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்க திட்டமிடப்பட்டு, அதற்கான முன் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றனவாம்.

- Advertisement -

Read more

Local News