‘ரெட்ரோ’ மற்றும் ‘ஹிட் 3’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் மே 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளன. இந்த இரண்டு படங்களுக்கும் மேம்பட்ட விளம்பர வேலைகளை மேற்கொண்டு வருகிறது தயாரிப்புக்குழு. இதற்கிடையே, நடிகர் நானி நடித்த புதிய படமொன்றை இயக்குவதற்காக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை நானி தனது சமீபத்திய பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்துடன் தொடர்புடைய கேள்விக்கு பதிலளித்த நானி, நான் கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தை மிகவும் விரும்புகிறேன். அவரின் ‘ரெட்ரோ’ திரைப்படமும் மே 1-ம் தேதியே வெளியாகிறது. இந்த இரண்டு படங்களும் பெரிய வெற்றிகளைப் பெறும் என நான் நம்புகிறேன் என்றார்.
மேலும் அவர் கூறும்போது, கார்த்திக் சுப்பராஜின் படங்கள், அவற்றின் கதை அமைப்பு மற்றும் அவற்றை அவர் இயக்கும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் ஒரு படம் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை எனக்கு நீண்ட நாளாகவே உள்ளது. இதற்காக சில கதைகள் தொடர்பாக எங்களுக்கிடையே விவாதங்கள் நடந்து வருகிறது என்று தெரிவித்தார்.