Touring Talkies
100% Cinema

Thursday, April 3, 2025

Touring Talkies

‘லவ் மேரேஜ்’ படத்தின் ‘கல்யாணம் கலவரம்’ பாடல் வெளியாகி ட்ரெண்ட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

2012 ஆம் ஆண்டு, இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் விக்ரம் பிரபு. அந்த திரைப்படம் வெளியானது பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால், அதனைத் தொடர்ந்து அவர் நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றியைப் பெறவில்லை.

2022 ஆம் ஆண்டு, விக்ரம் பிரபு நடித்த டாணாக்காரன் திரைப்படத்தை நடிகரும் இயக்குநருமான தமிழ் இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் நேரடியாக **ஓ.டி.டி.**யில் வெளியானது. இது விக்ரம் பிரபுவுக்கு திரும்பும் படியாக அமைந்தது. அதன்பிறகு, 2023 ஆம் ஆண்டு யுவராஜ் தயாளன் இயக்கிய இறுகப்பற்று திரைப்படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது, ‘லவ் மேரேஜ்’ படத்தை வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய சுரேஷ் இயக்கவுள்ளார். இதன் மூலம் அவர் இயக்குநராக அறிமுகமாகிறார். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்த படத்திற்கான கதையை ‘டாணாக்காரன்’ பட இயக்குநர் தமிழ் எழுதி இருக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதும் சமூக ஊடகங்களில் வைரலானது.ரொமான்ஸ் கதைக்களத்தில் உருவாகும் இந்த திரைப்படம் கோடை காலத்தில் வெளியிடப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், “லவ் மேரேஜ்” படத்தின் “கல்யாண கலவரம்” என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலை ஷான் ரோல்டன் இசையமைத்து பாடியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News