தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்தி தற்போது ‘சர்தார் 2’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போதைய நிலையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், அவரது சகோதரரான சூர்யாவின் ‘கங்குவா’ திரைப்படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் (கேமியோ) நடித்திருந்த அவர், அடுத்ததாக நடிகர் நானி நடிக்கும் ‘ஹிட் 3’ படத்திலும் கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், ‘ஹிட் 4’ திரைப்படத்தில் கார்த்தி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், அந்த கதையின் தொடர்ச்சிக்காகவே அவர் ‘ஹிட் 3’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் நானி, ‘சூர்யாவின் சனிக்கிழமை’ படத்துக்குப் பிறகு ‘ஹிட் 3’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில், ‘கே.ஜி.எப்’ திரைப்படம் மூலம் பிரபலமான நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை பிரபல இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கி உள்ளார். பிரசாந்தி திபிர்னேனி தயாரித்துள்ள இந்த திரைப்படம், வருகிற மே 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.