நடிகர் அஜித் குமார் தனது 63வது திரைப்படமான ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்து வருகிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இப்படத்தில், அஜித்துடன் இணைந்து த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க, இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் பணியாற்றுகிறார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஜி.வி. பிரகாஷிடம், ‘குட் பேட் அக்லி’ பற்றிய கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு பதிலளித்த அவர்,‘குட் பேட் அக்லி’ ஒரு மாஸ் செலிபிரேஷன் ட்ராக் ஆக இருக்கும். ஆதிக் ரவிச்சந்திரனுடன் நான் ஏற்கனவே ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ மற்றும் ‘மார்க் ஆண்டனி’ ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளேன். அந்த படங்களில் வெளியான பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. இப்போது மூன்றாவது முறையாக ஆதிக் இயக்கத்தில் இசையமைத்துள்ளேன். அந்தப் பாடல்கள் வெளியானபோது, ரசிகர்கள் எப்படி உணர்ந்தார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் கொண்டாட தயாராகுங்கள் எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்நான் தற்போது பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறேன். இயக்குநர் ரஞ்சித் அவர்களுடன் ஒரு புதிய படத்திற்கும் இசையமைத்து வருகிறேன். அதேபோல், செல்வராகவன் அவர்களுடனும் பணியாற்றி வருகிறேன்.” என தெரிவித்தார்.இளையராஜா ‘சிம்பொனி’ பற்றிய கேள்விக்கு பதிலளித்த ஜி.வி.பிரகாஷ், நான் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தேன். இளையராஜா சாரும், ஏ.ஆர். ரஹ்மான் சாரும்தான் நான் இசைத்துறைக்கு வர காரணமாக இருந்தனர். அவர்களே என் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்” எனக் கூறினார்.