நடிகர் பிரபுவின் நடிகருமான விக்ரம் பிரபு தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை வைத்துள்ளார்.
‛கும்கி, இவன் வேற மாதிரி, அரிமா நம்பி’ போன்ற தொடர் வெற்றிப் படங்களில் நடித்து ரசிகர்களிடம் நல்ல பெயரை பெற்றார். ஆனால் அதற்கு பிறகு அவர் நடித்த படங்கள் பெரும்பாலும் தோல்வியை சந்தித்தன.
சமீபத்தில் வெளியான ‛டாணாக்காரன்’ படமே விக்ரம் பிரபுவுக்கு சிறந்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ‛குட் நைட்’ படத்தின் இயக்குநர் விநாயக் சந்திரசேகரனின் உதவி இயக்குநராக பணியாற்றிய சண்முக பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு சான் ரோல்டன் இசையமைக்க உள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.