தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான மற்றும் கியூட்டான ஜோடியாக நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியரை கூறலாம். மிகுந்த பொருத்தமான தம்பதிகளாக ரசிகர்கள் மத்தியில் அவர்கள் ஏற்கனவே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளனர்.இவர்கள் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் தங்கள் புகைப்படங்கள் மற்றும் குழந்தைகளின் புகைப்படங்களை பகிர்ந்தாலே, சில நொடிகளில் லட்சக்கணக்கான லைக்குகள் கிடைக்கின்றன. இவர்களைத் தொடர்ந்து பின் தொடரும் ரசிகர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இவர்கள் தங்களது குழந்தைகளுடன் அடிக்கடி உற்சவங்கள் மற்றும் விழாக்களை கொண்டாடும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். சமீபத்தில், குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, தங்களது குழந்தைகளுடன் இணைந்து சிறப்பாக விழாவைக் கொண்டாடியுள்ளனர்.
இந்த நிகழ்வின் புகைப்படங்களை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், “பெற்றோர்களை மகிழ்விக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் குழந்தைகள் தின வாழ்த்துகள்,” என்ற வாசகத்துடன் ஒரு பதிவு செய்துள்ளார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு கிடைத்து, லைக்குகள் மழையாக குவிந்து வருகின்றன.