Wednesday, November 13, 2024

என் உடல் எடை குறைவுக்கு பின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் இதுதான்… நடிகை வித்யா பாலன் OPEN TALK!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இந்தி திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான வித்யாபாலன், மறைந்த சில்க் சுமிதாவின் வாழ்க்கை கதையை அடிப்படையாக கொண்ட ‘தி டர்ட்டி பிக்சர்’ படத்தில் நடித்து தேசிய விருது பெற்றவர். தமிழில் அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமானார்.

சமீபத்தில், வித்யா பாலன் நடிப்பில் உருவாகிய ‘பூல் பூலைய்யா 3’ திரைப்படம் கடந்த மாதம் 1-ம் தேதி வெளியானது. அனீஸ் பஸ்மி இயக்கிய இந்த படத்தில் கார்த்திக் ஆர்யன், திரிப்தி டிம்ரி, மாதுரி தீட்சித் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். வித்யா பாலன் உடல் எடையால் விமர்சிக்கப்பட்ட பின்னர், இந்த படத்தில் அவர் எடை குறைத்திருந்தார்.

நேர்காணல் ஒன்றில் தனது உடல் எடை குறைவுக்கு பின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களைப் பற்றி பகிர்ந்த அவர், “என் உடலில் எவ்வளவு உடற்பயிற்சிகளை செய்தாலும் எடை அதிகரித்துக்கொண்டே இருந்தது. இதனால் மருத்துவ குழுவை அணுகினேன். அவர்கள் என்னிடம், ‘இது கொழுப்பல்ல, வீக்கம்’ என்று தெரிவித்தனர். அவர்களின் பரிந்துரைப்படி, வீக்கத்தைக் குறைக்கும் உணவுமுறையை பின்பற்றினேன்.தற்போது, பலரும் எனக்கு எடை குறைந்ததாக பாராட்டுகிறார்கள். மேலும், இதுவரை எனக்கு வழங்கப்படாத சில புதிய கதாபாத்திரங்களும் கிடைத்துள்ளன. இந்த மாற்றம் என் திரை வாழ்க்கையில் புதிய தொடக்கமாக அமைந்துள்ளது,” என்றார் வித்யாபாலன்.

- Advertisement -

Read more

Local News