Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

திரையரங்குகளுக்கு வர காத்திருக்கும் சூது கவ்வும் 2ம் பாகம்… வெளியான ரிலீஸ் அப்டேட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

2013-ல் நலன் குமாரசாமி இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடித்த ‘சூது கவ்வும்’ திரைப்படம் வெளியானது. இதில் சஞ்சிதா ஷெட்டி, அசோக் செல்வன், பாபி சிம்ஹா, ரமேஷ் திலக், கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். டார்க் காமெடி பாணியில் உருவாகிய இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்பாடத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ‘சூது கவ்வும்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. ‘சூது கவ்வும் 2’ படத்தை இயக்குநர் எம்.எஸ். அர்ஜுன் இயக்குகிறார். இதில் விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிகர் ‘மிர்ச்சி’ சிவா நடித்துள்ளார். இந்தப் படத்தை தங்கம் சினிமாஸ் சார்பில் எஸ் தியாகராஜன் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சார்பில் சி.வி. குமார் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்த படத்திற்கு கார்த்திக் கே தில்லை ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பை எட்வின் லூயிஸ் விஸ்வநாத் மேற்கொள்கிறார், மற்றும் படத்தொகுப்பை இக்னேஷியஸ் அஸ்வின் செய்கிறார். சமீபத்தில் ‘சூது கவ்வும் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல் வெளியாகி பரவலான கவனம் பெற்றது. இந்நிலையில், படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் வரும் டிசம்பர் மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

- Advertisement -

Read more

Local News