Monday, October 28, 2024

‘கூலி’ படப்பிடிப்பில் மீண்டும் இணைந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! #COOLIE

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 30-ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனைகளின் போது, அவருடைய இதயத்தில் இருந்து ரத்தத்தை உடலின் பிற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லும் முக்கிய தமனியான ‘அயோர்டா’வில் வீக்கம் இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த நிலைக்கு சிகிச்சையாக, அவருக்கு மகா தமனி வீக்கம் முழுமையாக சரியாகும் வகையில் ‘ஸ்டென்ட்’ பொருத்தப்பட்டது.மருத்துவர்கள் அவரை கண்காணித்தபின், கடந்த 4-ஆம் தேதி உடல்நிலை மேம்பட்டு, அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சிகிச்சைக்கு பின், ரஜினிகாந்த் வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார்.

இந்தநிலையில், நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓஎம்ஆர் சாலையில் உள்ள ஆதித்யா ராம் ஷூட்டிங் ஸ்பாட்டில் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அங்கு மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டு, சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. அந்த சண்டைக் காட்சிகளுக்கான ஷூட்டிங்கில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றுள்ளார்.

- Advertisement -

Read more

Local News