Thursday, October 24, 2024

பைக்கில் மாஸ்ஸாக போஸ்… தினம் தினம் விதவிதமாக வெளியாகும் அஜித்தின் புகைப்படங்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித், “விடா முயற்சி” படத்தை முடித்துவிட்டு தற்போது “குட் பேட அக்லி” படத்தில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களின் வேலைகளை முடித்த பிறகு, அவர் சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து ஓரளவு இடைவெளி எடுக்கப் போவதாக தகவல்கள் வெளியானது.

இந்த சூழலில், அஜித் மீண்டும் கார் பந்தயத்தில் பங்கேற்கப் போவதாக உறுதி செய்யப்பட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன. கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் இதற்காக அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும், அவர் தன்னுடைய சொந்த கார் பந்தய அணியையும் தொடங்கியுள்ளார்.

அஜித்தின் அனைத்து செயல்பாடுகளும் அவ்வப்போது அவரது குழுவினரால் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. குறிப்பாக, சுரேஷ் சத்திரா மற்றும் அஜித்தின் மனைவி ஷாலினி ஆகியோரின் சமூக வலைதள பக்கங்களில் அஜித்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தினமும் வெளியிடப்படுகின்றன. இதற்கு இணையாக, தற்போது அஜித் பைக் ஓட்டிச் செல்லும் புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

- Advertisement -

Read more

Local News