Tuesday, October 22, 2024

பிரபாஸ்-ன் ‘தி ராஜா சாப்’ நியூ லுக் போஸ்டர்-ஐ வெளியிட்ட படக்குழு! #TheaRajasaab

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்கு திரைப்பட உலகின் முன்னணி நடிகராக விளங்கும் பிரபாஸ், நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவான ‘கல்கி 2898 ஏ.டி’ திரைப்படம் ரூ.1,050 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது. இதற்குப் பின்னர், மாருதி இயக்கத்தில் ஹாரர் காமெடி வகைச் திரைப்படமான ‘தி ராஜா சாப்’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்து, மாளவிகா மோகனன், நிதி அகர்வால், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில், படக்குழு பிரபாஸின் புதிய தோற்றத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, ‘தி ராஜா சாப்’ படத்தின் முக்கிய அப்டேட் நாளை வெளியாகும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், ‘தி ராஜா சாப்’ படத்தைத் தொடர்ந்து பிரபாஸ் ‘சலார் 2’, ‘ஸ்பிரிட்’, ‘சீதாராமம்’ இயக்குநர் ஹனு ராகவபுடியுடன் ஒரு படத்தில் இணைவது உள்ளிட்ட பல படங்களில் ஒப்பந்தமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News