Monday, October 21, 2024

அழைப்பு வந்தாலும் வராவிட்டாலும் த‌.வெ.க மாநாட்டிற்கு போவேன்… விஷால் அதிரடி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் விஜய் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி, கடந்த மாதம் கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தினார். இதைத் தொடர்ந்து, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வரும் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் முதல் மாநில மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டிற்கான தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

மாநாட்டில் மருத்துவர் அணி, தொழில்நுட்ப அணி உள்ளிட்ட பல அணிகள் பிரிந்து வேலைகள் நடைபெற்று வருகின்றன. விஜய் மாநாட்டில் என்ன பேசப் போகிறார், கட்சியின் கொள்கை என்ன என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

செய்தியாளர் ஒருவர், “விஜய்யின் மாநாட்டில் நீங்கள் பங்கேற்கிறீர்களா?” என கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், “நானும் ஒரு வாக்காளர் என்பதால் மாநாட்டுக்கு செல்வேன். விஜய் என்ன சொல்லப் போகிறார், தற்போதைய அரசியல்வாதிகளை விட மக்களுக்கு என்ன செய்யப் போகிறார் என்று ஒரு வாக்காளராகப் பார்ப்பேன். இதற்காக அழைப்பிதழ் வேண்டாம்” எனத் தெரிவித்தார்.மேலும், “நான் கூட்டத்தில் ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கப்போவதுதான். இதற்காக தமிழக வெற்றிக் கழகத்தில் இணைகிறேன் எனச் சொல்ல முடியாது. முதலில் அவர் மாநாடு நடத்தட்டும், அதில் என்ன பேசுகிறார், கட்சியின் கொள்கை என்ன என்பதைக் கண்டுப் பார்ப்போம்” எனக் கூறினார்.

- Advertisement -

Read more

Local News