Saturday, October 19, 2024

கேம் சேன்ஜர் படத்தில் ஒரு பாடலுக்கு இத்தனை கோடியா? ஷங்கரின் பிரம்மாண்டம் எப்படி இருக்குமோ? #GameChanger

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண், கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள “கேம் சேஞ்சர்” படம் அடுத்த வருடம் பொங்கல் திருநாளில் வெளியாக இருக்கிறது. ‘ஆர்ஆர்ஆர்’ படத்திற்குப் பிறகு ராம் சரண் நடித்து வெளிவர இருக்கும் படம் இது. கடந்த சில வருடங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வந்ததால், அதன் வெளியீடு பலமுறை தள்ளி வைக்கப்பட்டு, தற்போது வெளியீட்டிற்கான தயார் நிலையில் உள்ளது.

இதன் இடையே, இப்படத்தில் உள்ள ஒரு பாடலுக்காக மட்டும் சுமார் 20 கோடி செலவிட்டதாக டோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை இவ்வளவு அதிக செலவில் ஒரு பாடல் படமாக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. பாடல்களை பிரம்மாண்டமாகவும் அழகிய முறையிலும் உருவாக்கும் திறன் கொண்டவர் ஷங்கர் என்பதால், இந்தப் பாடலின் பிரம்மாண்டம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பாடல் 20 கோடி செலவில் எப்படியாக இருக்குமோ என்பதைத் தெரிந்துகொள்ள, தெலுங்கு ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.

- Advertisement -

Read more

Local News