Saturday, October 19, 2024

என்னை பார்த்து Welcome to Big League-னு சொன்னாரு அஜித் சார்… அமரன் இசைவெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அமரன். இப்படம் அக்டோபர் மாதம் இறுதியில் வெளியாகிறது. இப்படம் முன்னாள் ராணுவ வீரரின் தியாகத்தை முக்கிய கதைகளுமாகக் கொண்டு உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று தனியார் கல்லூரி ஒன்றில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக லோகேஷ் கனகராஜ் மணிரத்தினம் கலைப்புலிதானு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், பிரின்ஸ் திரைப்படம் வெளியாகி நிறைய நெகடிவ் விமர்சனங்கள். நான் இன்னும் கதைய நல்ல செலக்ட் பண்ணிருக்கலாமோனு யோசிச்சேன். நான் அந்த டைம்ஸ் என் நண்பரோட நிகழ்ச்சிக்கு போயிருந்தேன். அப்போ நான் உள்ள நுழையும்போது அஜித் சார் இருந்தாரு. என்னை பார்த்து Welcome to Big League-னு சொன்னாரு. எனக்கு ஒன்னுமே புரியல. உங்கள் வளர்ச்சியைக் கண்டு பலர் Insecured ஆக இருக்காங்கன்னா You are into big league’ னு சொன்னார். அப்போ புரிஞ்சிக்கிட்டேன் நமக்கு வர விமர்சனங்களுக்குள்ள இருக்குற அர்த்தத்தை புரிஞ்சுக்கனம்னு என்று பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News