Monday, September 30, 2024

தளபதி 69 படத்தில் நடிக்கிறாரா நடிகை மஞ்சு வாரியர்? உலாவும் புதிய தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கோட் படத்துக்குப் பிறகு, விஜய் தனது 69வது படத்தில் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார், படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது. சமந்தா, ஸ்ரீ லீலா ஆகியோர் விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ளனர் எனச் செய்திகள் வந்துள்ள நிலையில், சிம்ரன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், அசுரன், துணிவு, வேட்டையான் போன்ற படங்களில் நடித்துள்ள மஞ்சு வாரியர், விஜயின் 69வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக இயக்குனர் எச்.வினோத் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் எனக் கூறப்படுகிறது.

மேலும், அஜித் நடித்த துணிவு படத்தில் மஞ்சு வாரியர் நடித்தபோது, எச்.வினோத், எனது அடுத்த படத்தில் நீங்கள் கண்டிப்பாக இருப்பீர்கள் எனக் கூறியதாகவும், அந்த வாக்குறுதியைப் பூர்த்தி செய்வதற்காகவே இப்போதும் அவரை இந்த படத்தில் சேர்த்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News