Monday, September 23, 2024

அட இது நம்ம லிஸ்டிலயே இல்லயே… வில்லனாக மம்மூட்டி கதாநாயகனாக விநாயகனா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மலையாள திரைப்படங்களில் குறிப்பாக புதிய முயற்சிகளை மேற்கொள்வதில், இளம் படைப்பாளிகளும் அவர்களுக்கு ஆதரவாக முன்னணி ஹீரோக்களும் துணை நிற்பது வழக்கமாக உள்ளது. இதே பாணியில், கடந்த சில ஆண்டுகளில் நடிகர் மம்முட்டி, தனது நடிப்பில் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரங்களை ஏற்று, புழு மற்றும் பிரம்மயுகம் ஆகிய படங்களில் அசத்தி தன் திறமையை நிரூபித்துள்ளார். குறிப்பாக, கதாநாயகனாக மட்டுமின்றி வில்லன் கதாபாத்திரங்களிலும் ஆழ்ந்த ஆர்வம் கொண்டு தொடர்ந்து நடித்து வருகிறார்.

அதற்குள், மம்முட்டி வில்லனாக நடிக்கும் அளவுக்கு தான் எவ்வளவு ஈடுபாடுடன் உள்ளார் என்றால், சமீபத்தில் ஜெயிலர் படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் பெயர் பெற்ற, பல வருடங்களாக வில்லனாக நடித்து வரும் நடிகர் விநாயகன் கதாநாயகனாக நடிக்க உள்ள படத்தில், மம்முட்டி அவருக்கு வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஜித்தின் கே ஜோஸ் என்பவர் இயக்குகிறார். இவர் துல்கர் சல்மான் நடிப்பில் வெற்றி பெற்ற குறூப் படத்தில் இணை கதாசிரியராக பணியாற்றியவர். மேலும், இந்த படத்தை மம்முட்டியின் சொந்த தயாரிப்பு நிறுவனமே தயாரிக்க உள்ளது என்பதும் புதிய தகவல் வெளிவந்துள்ளது.

- Advertisement -

Read more

Local News