Friday, September 20, 2024

பழம்பெரும் நடிகையான சிஐடி சகுந்தலா காலமானார்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

1970ஆம் ஆண்டு ஜெய்சங்கர் நடித்த ‘சிஐடி சங்கர்’ படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர் ஏ. சகுந்தலா. இப்படத்தில் அவர் நடித்ததை பார்த்து பலரும் பாராட்டியதால், பின்னர் அவர் சிஐடி சகுந்தலா என்று அழைக்கப்பட்டார். இதன் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளில் பல படங்களில் நடித்துப் பிரபலமானார்.

அவர் நடித்த முக்கியமான படங்களில் ‘படிக்காத மேதை’, ‘கை கொடுத்த தெய்வம்’, ‘திருடன்’, ‘தவப்புதல்வன்’, ‘வசந்த மாளிகை’, ‘நீதி’, ‘பாரத விலாஸ்’, ‘ராஜராஜ சோழன்’, ‘பொன்னூஞ்சல்’, ‘என் அண்ணன்’, ‘இதயவீணை’ போன்றவை அடங்கும். அவர் தனது நடிப்பால் ரசிகர்களின் மனதில் நிலைத்து நின்றார்.

சினிமாவிலிருந்து விலகிய பிறகு, சீரியல்களிலும் தொடர்ந்து நடித்து வந்த அவர், பின்னர் வயது மூப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள தனது மகளின் வீட்டில் தங்கியிருந்தார். நேற்று (செப். 17) அவருக்கு உடல்நிலை மோசமானதால் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். சகுந்தலாவின் மறைவிற்கு திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

Read more

Local News