விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான ’96’ படத்தை இயக்கி பிரபலமான இயக்குநர் பிரேம் குமார், தமிழ் சினிமாவில் தெய்வீக காதல் கதைகளை சித்தரித்த படங்களில் முக்கியமானவராக உள்ளார். அதைத்தொடர்ந்து, நடிகர் கார்த்தியை வைத்து ‘மெய்யழகன்’ படத்தை இயக்கியுள்ளார்.
‘கார்த்தியின் 27’-வது படமான இந்த படத்தை, சூர்யா-ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது. இப்படத்தில் அரவிந்த் சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் இந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று கோயம்புத்தூரில் மிக பிரம்மாண்ட முறையில் நடைபெற உள்ளது. ’96’ திரைப்படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா, இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். இதனால், இப்படத்தின் பாடல்கள் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.