Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த டோவினோ தாமஸின் ஏ.ஆர்.எம் ட்ரெய்லர்! #ARM

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டோவினோ தாமஸ், “மாரி” மற்றும் “மின்னல் முரளி” போன்ற திரைப்படங்களில் நடித்துப், ரசிகர்களின் மனதில் ஆழமான இடத்தைப் பெற்றார். டோவினோ தாமஸ், விதவிதமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பதால், மலையாள ரசிகர்கள் மட்டுமின்றி, தமிழ் மற்றும் பிற மொழிகளிலும் அவருக்கு பெரும் ரசிகர்கள் உள்ளனர்.

தற்போது, அவர் “அஜயந்தே ரண்டம் மோஷனம்” படத்தில் மூன்று விதமான கெட்டப்பில் நடித்து வந்தார். இந்தப் படத்துக்கு கடந்த அக்டோபர் மாதம் பூஜை நடைபெற்று, படப்பிடிப்பு விறுவிறுப்பாக முடிந்தது. இப்படத்தை சுஜீத் நம்பியார் எழுதிய கதைக்கு, அறிமுக இயக்குநரான ஜித்தின் லால் இயக்கம் செய்துள்ளார்.

டோவினோ தாமஸ் நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில், கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடித்துள்ளார். மலையாள திரையுலகில் கீர்த்தி ஷெட்டி அறிமுகமாகும் இந்தப் படத்தில், அவர்களைத் தவிர பாசில் ஜோசப், ஐஸ்வர்யா ராஜேஷ், சுரபி லட்சுமி, ரோகினி, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் முக்கிய2 கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் தமிழ்நாட்டின் காரைக்குடியைச் சுற்றிய பகுதிகளில் படமாக்கப்பட்டன. 1900, 1950, 1990 ஆகிய மூன்று காலக்கட்டங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், “மாரி” படத்தின் மூலம் நம் மனதில் இடம் பிடித்த டோவினோ தாமஸ், 3 வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இப்படத்தை மலையாளம் தவிர, தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு போன்ற பிற மொழிகளிலும் பான் இந்தியத் திரைப்படமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டு, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

- Advertisement -

Read more

Local News