Tuesday, November 19, 2024

துபாயில் புர்ஜ் கலீஃபாவில் வெளியான விஜய் சேதுபதியின் மகாராஜா பட ப்ரோமோஷன் வீடியோ!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 50-வது திரைப்படம் “மகாராஜா.” குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார். சுதன் சுந்தரம், ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி கவனம் பெற்றது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியானது. இப்படம் ஜூன் 14-ஆம் தேதி வெளியிடப்படும் என்று படக்குழு சில நாட்களுக்கு முன் அறிவித்தது.படத்தின் ப்ரொமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி, துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபாவில் மகாராஜா படத்தின் போஸ்டர் திரையிடப்பட்டது. இதைக் காண படக்குழுவினர் நேற்று துபாய் சென்றனர்.

புர்ஜ் கலீஃபாவுடன் விஜய் சேதுபதி எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வந்த படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், இத்திரைப்படம் விஜய் சேதுபதிக்கு வெற்றிப்படமாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சினிமாவில் நடிப்பதற்கு முன் விஜய் சேதுபதி துபாயில் அக்கவுண்டண்ட் வேலை செய்தார், ஆனால் இப்போது அவரது வளர்ச்சியால் துபாயின் புர்ஜ் கலீஃபாவில் அவரது மகாராஜா படத்தின் போஸ்டர் திரையிடப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடம் சேதுபதியின் வளர்ச்சியை வெளிப்படுத்துகிறது.

- Advertisement -

Read more

Local News