Tuesday, September 17, 2024

விரைவில் திரைக்கு வரும் ‘கருடன்’… சூரி வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சூரி நடிப்பில் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் கருடன். இப்படத்தை. எதிர்நீச்சல், கொடி படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கிவுள்ளார். இப்படத்தில் சூரி, சசி குமார், உன்னி முகுந்தன், ரோஷினி ஹரிப்ரியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த மாதம் கருடன் ரிலீஸாக உள்ளதாக சூரி ஒரு அப்டேட்-ஐ கொடுத்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாகி ஜொலிக்கிறார்.தற்போது விடுதலை 2ம் பாகம் இந்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தாமதமாகிறது, அதற்கு பிறகு ஆரம்பிக்கப்பட்ட கருடன் படமானது இந்த மாதம் ரிலீஸ் ஆகவுள்ளது.அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை திடீரென தற்போது சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த மே மாதம் சுந்தர். சி, யோகி பாபு, தமன்னா, ராஷி கன்னா நடிப்பில் வெளியான அரண்மனை, கவின் நடித்துள்ள ஸ்டார் படங்கள் வெளியாகி உள்ள நிலையில், அடுத்த வாரம் சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் வெளியாக காத்திருக்கிறது.

இந்நிலையில், கருடன் மே 24ம் தேதி அல்லது மே 31ம் தேதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News