Tuesday, November 19, 2024

இரும்புக்கை மாயவி படத்தில் நானும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்… ஆர்‌ஜே. பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கங்குவா படத்துக்கு பிறகு, கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் உருவான தனது 44வது படத்தில் சூர்யா நடித்து முடித்துள்ளார். மாறுபட்ட காதல் கதையை மையமாகக் கொண்ட இந்த படத்தை அடுத்து, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் தனது 45வது படத்தில் சூர்யா நடிக்க உள்ளார்.

இந்தநிலையில், ஆர்.ஜே. பாலாஜி சமீபத்திய பேட்டி ஒன்றில், லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் ‘இரும்புக்கை மாயாவி’ பற்றிய விவரங்களை பகிர்ந்துள்ளார். மாநகரம் படத்திற்கு முன்பே லோகேஷ் கனகராஜ், சூர்யாவை வைத்து ‘இரும்புக்கை மாயாவி’ படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார். அதில் நான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தேன்.

ஆனால் சில காரணங்களால் அது தொடங்கப்படவில்லை. எனினும், லோகேஷ் கனகராஜ் அந்த படத்தை கண்டிப்பாக இயக்குவார். அப்போது, சூர்யாவுடன் சேர்ந்து நான் அப்படியே அதே கதாபாத்திரத்தில் நடிப்பேன் என அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News