Tuesday, November 19, 2024

பிரபல சின்னத்திரை நடிகைக்கு ஏற்பட்ட சிறு விபத்து… பதறிப்போன ரசிகர்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, மக்கள் மத்தியில் பிரபலமான ‘பாண்டிய ஸ்டோர்ஸ்’ சீரியலில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை சாய் காயத்ரி மதுரையை சேர்ந்தவர். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டிஜி வைஷ்ணவ் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்த இவர், மாணவியாக இருக்கும்போதே நடிகையாக வேண்டும் என்ற ஆசையுடன் செயல்பட்டார்.

பல சேனல்களில் தொகுப்பாளினியாக வாய்ப்புகளை தேடி வந்தார். அதன்படி ஜெயா டிவி, ஜீ தமிழ், ராஜ் டிவி போன்ற சேனல்களில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். ஜெயா டிவியில் தொகுத்து வழங்கிய ‘கில்லாடி ராணி’ எனும் நிகழ்ச்சி இவரை குறிப்பிடத்தக்க அளவில் பிரபலமாக்கியது.

சாய் காயத்ரி நடிகையாக மட்டுமில்லாமல், தொழில்முனைவோராகவும் செயல்படுகிறார். ‘சாய் சீக்ரெட்’ என்ற ஆர்கானிக் காஸ்மெடிக் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அவரின் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். நேற்று, காஸ்மெடிக் பொருள் தயாரிக்கும்போது, எதிர்பாராத விபத்தில் மிஷினில் கை சிக்கியது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையில் இருந்து தனது நலநிலையில் இருப்பதை உறுதிப்படுத்தும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இருப்பினும், இந்த செய்தி ரசிகர்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது.

- Advertisement -

Read more

Local News