அனிருத் ரவிச்சந்தர் – காவ்யா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. குறிப்பாக, ரஜினிகாந்த், அஜித்குமார், கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி ஆகியோர் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
சென்னையில் நேற்று இரண்டாவது நாளாக நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்ச்சியில், திரையுலகம் மற்றும் கிரிக்கெட் துறையைச் சேர்ந்த பல முக்கியப் பிரபலங்கள் பங்கேற்றனர். ரஜினிகாந்த், அஜித், தோனி ஆகியோரின் சந்திப்பும், அவர்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
நடிகர்கள் சிவகார்த்திகேயன், சிலம்பரசன், பிரதீப் ரங்கநாதன் உள்ளிட்டோரும் விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இயக்குநர்கள் அஸ்வத் மாரிமுத்து, விக்னேஷ் ராஜா, ஹெச்.வினோத், லோகேஷ் கனகராஜ், நெல்சன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இந்த நட்சத்திரக் கூட்டத்தின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
